சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர் அமைதிப்பேரணி நடத்தினர்.
இந்த அமைதிப்பேரணி, ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து புறப்பட்டு மெரினா வந்தடைந்து. தொடர்ந்து அவர்கள் கருணாநிதி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செய்தனர். இதற்கு முன்பு அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போல தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாகவே செய்யப்பட்டு வந்தன. இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
![நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16039716_899_16039716_1659866336760.png)
பெசன்ட் நகர், ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்" போட்டியில் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
![அமைதி பேரணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16039716_420_16039716_1659866372066.png)
சில இடங்களில் கருணாநிதியின் எழுத்தாற்றலைப்போற்றும் விதமாக, பகுதிநேர ஓவிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி கருணாநிதியின் உருவம் வரையப்பட்டது. அப்போது பேனாவினாலேயே நீர் வண்ணத்தில் பேனாவை நனைத்து,தொட்டு முன்னாள் கருணாநிதியின் உருவம் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது தேச துரோகமா..? ஒரே மதம், ஒரே மொழி என்பது தேசவிரோதமா..? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி