ETV Bharat / state

Exclusive: அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் வலியுறுத்தலாமா? திமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? - back the ministers portfolio transfer letter

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து துறைகளை மாற்றக் கோரிய கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ஆளுநரை பதவியிறக்கம் செய்யவேண்டி, திமுக என்ன செய்யலாம் என வழக்கறிஞர் க.இளங்கோவன் விவரித்தவைகளை இந்த சிறப்பு செய்தியில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 16, 2023, 9:05 PM IST

வழக்கறிஞர் க.இளங்கோவன் ஈடிவி பாரத் தமிழ்நாடுடன் சிறப்பு நேர்க்காணல்

சென்னை: பண மோசடி, அளவிற்கு அதிகமான சொத்து குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் அமலாக்கத்துறையால் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் நெஞ்சு வலி காரணமாக, ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், காவிரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அவர் வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை யாருக்கு பிரித்து தருவது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்து வழங்கிய கடிதத்தை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. இதனைத்தொடர்ந்து, இதற்கு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கைதாகி, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?: இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Minister V.Senthil Balaji) துறைகளை பிற அமைச்சர்களுக்கு ஒதுக்குவதை முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தது அரசியல் சட்டத்திற்குப் புறம்பான, முரணான செயலாகும் என வழக்கறிஞர் க.இளங்கோவன் ஈடிவி பாரத் உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆளுநரை பதவியிறக்கம் செய்யவேண்டி, திமுக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் (Droupadi Murmu) முறையிட்டு, மேல் நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறு கைதான அமைச்சர் - ஒரு அரசு ஊழியர் - பதவியில் நீடிக்கலாம்?: கேபினட் அமைச்சரவை முறையில் அனைத்து கேபினட் அமைச்சர்களும் தனி அதிகாரம் உள்ளவர்கள். ஒரு அமைச்சர், தனது அமைச்சரவையில் நீடிப்பதை முடிவு செய்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், ஆளுநர் அல்ல. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையும் பொறுப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் மட்டுமே உண்டு என்றார். ஆளுநருக்கு அந்த கட்டுப்பாடு இல்லை எனக்கூறிய அவர், ஆளுநருக்கு தகவல் தேவை என்றால், துறையின் செயலரிடம்தான் பெற வேண்டுமமே தவிர அமைச்சரிடம் அல்ல என்று கூறினார். மேலும், இதற்கு நீதிமன்றங்களிலும் துறை செயலர்கள்தான் பதிலிளிக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்ற போதே, இந்த வழக்கு நிலுவையில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் இது கடந்து வந்த பாதையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். ஆளுநர் பதவி, நியமன பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி அல்ல என்றும் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு என்றும் ஆளுநருக்கு அல்ல என்றும் விவரித்தார். மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை என்றும் கூறியதோடும் இதற்கு முன்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் இறக்கும் வரை முதலமைச்சராகத்தான் இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று நினைவுக்கூறினார்.

மத்தியில் ஆளும் அரசுக்கு வலுவான பெரும்பான்மை இருக்கும் நிலையில் ஆளுநரை நீக்க வலியுற்த்தி கோரி, குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைப்பதால் என்ன பயன் இருக்கும்? எந்த பொறுப்புமற்ற பொறுப்பில் இருப்பவர் ஆளுநர் என்றும் அவர் மறைமுக தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் என்றும் கூறினார். எனவே, அவரிடம்தான் அரசியல் சாசனத்தின் மீது உறுதியேற்ற ஆளுநர் அரசியல் சாசனத்தை மீறி செயல்படுகிறார் என்று முறையிட வேண்டும். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் எனக்கூறியதோடு சட்டத்தில் அதற்கு வழி உண்டு என்றார். ஆனால் திமுக, சிபிஎம் உட்பட எந்த கட்சியும் அதற்கு தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Breaking News: செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.