சென்னை: வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஓபிஎஸ் திமுகவுடன் கைகோர்த்து கொண்டு தலைமை கழகத்தை சூரையாடி இருக்கிறார். ஓபிஎஸ் தலைமை அலுவலகத்தில் தடாலடியாக நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார்.
சமூக விரோதிகள் நுழைவார்கள், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கூறியுள்ளோம். ஆனால், திமுக, ஓபிஎஸ்ஸை கைக்குள் போட்டுகொண்டு இந்த வேலையை செய்துள்ளது. தலைமை கழகத்தில் உள்ள ஆவணங்களை ஓபிஎஸ் திருடி சென்றுள்ளார்.
பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தும் இந்த திமுக அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. தலைமை அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் அதிமுக தலையிடவில்லை. எத்தனை ஸ்டாலின் வந்தாலும், ஓபிஎஸ் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைப்பு; வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை