திமுக தலைமைக்கழகம் பொதுத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "திமுகவின் 15ஆவது பொதுத்தேர்தல் 2020ஆம் ஆண்டு பிப்பவரி மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 1949ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, இதுவரை 14 பொதுத்தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் திராவிட முனேற்ற கழகம் ஆகும்.
![திமுக 15 வது பொதுத் தேர்தல் திமுகவின் 15 வது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியீடு..! DMK's 15th General Election Announcement Release DMK's 15th General Election Announcement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5939196_dmk.jpg)
கழக சட்டத்திட்டங்களின்படி, பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். இவற்றைத் தொடர்ந்து, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும். அதன்பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், கழகத் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: அடையாளம் தெரியாத கும்பலுக்கு வலைவீச்சு!