இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பத்திரிகைகளில் நிலுவையிலுள்ள மற்றும் இந்தாண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமுமின்றி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது.
ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திலிருந்து சென்னையிலிருந்து வெளியூர் சென்றவர்கள் திரும்பிவரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் சொத்து வரி செலுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது.
எனவே, சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூல் அறிவிப்பைத் திரும்பப் பெற்று, வரி வசூலைக் குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரத் பெட்ரோலியம் திட்டம்... விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுந்துயரம்: ஸ்டாலின்