ETV Bharat / state

நீட் விலக்கு மசோதா விவகாரம் - ஆளுநர் ரவி மீது திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கடும் விமர்சனம்

நீட் விலக்கு மசோதாவிற்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன் எனக் கூறிய ஆளுநர் ரவியின் கருத்திற்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

"ஆர்.என் ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் எடுபிடி" - திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் விமர்சனம்

author img

By

Published : Aug 12, 2023, 4:04 PM IST

Updated : Aug 12, 2023, 4:42 PM IST

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 12) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என மாணவரின் தந்தை ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, "கல்வி பொதுப்பட்டியில் இருப்பதால் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தாலும் நான் கையெழுத்திட மாட்டேன். நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்.

நீட் தேர்வு திறமையான மாணவர்களை கொண்டு வரவே உள்ளது. பயிற்சி மையம் இருந்தால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்று ஒரு போலி பிம்பத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளனர்" என கூறினார். ஆளுநரின் இந்த நீட் தேர்வு குறித்த கருத்து மேலும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், "ஆர்.என் ரவி அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காதவர், தன்னுடைய பதவியை அவமானப்படுத்துகிறவர்.

இதையும் படிங்க: "சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியை முளையிலேயே அகற்றிடுக" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஆளுநர் பதவி என்பது ஆர்.என் ரவியால் கேவலப்படுத்தப்படும் நிலையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டியது அவரின் கடமை. தன்னுடைய விருப்பு, வெறுப்பு போன்று நடந்து கொள்ளக் கூடாது. அவர் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். இவர் கூறுவது தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல்.

தொடர்ந்து பேசிய அவர், இதே போன்ற செயல்களை தான் அவர் செய்து கொண்டு வருகிறார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டால் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை விடுத்து, கையெழுத்து போட மாட்டேன் எனக் கூறுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கிறேன்.

நீட் மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிய கருத்திற்கு அரசும், முதலமைச்சரும் ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். வாய்க்கு வந்தபடி உளறுவதே ஆளுநரின் வேலையாக இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் சார்பில் கண்டன அறிக்கை வெளியாகும் என நினைக்கின்றேன்" என கூறினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்!

Last Updated : Aug 12, 2023, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.