ETV Bharat / state

பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் திணிப்பு- ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தத்துவப் படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

dmk president
author img

By

Published : Sep 26, 2019, 9:15 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி. கேம்பஸில் 2019ஆம் ஆண்டுக்கான தத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி. கேம்பஸில் 2019ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு அதில், 'இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு' என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!

அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும் உயர் கல்வித் துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் பார்க்க : விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்: ஸ்டாலின் பரப்புரை தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.