ETV Bharat / state

திமுகவினர் அமைதிப் பேரணி: அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை! - dmk peace rally in chennai

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலை முதல் அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

சென்னை
சென்னை
author img

By

Published : Feb 3, 2021, 10:38 AM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை இப்பேரணி நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

பின்னர் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை!

இந்த பேரணியின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:அண்ணாவின் 52ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.