ETV Bharat / state

தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என தொண்டர்கள் சபதம் ஏற்கவேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியைப் பெறவேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

dmk-mupperum-vizha-stalin-speech
தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
author img

By

Published : Sep 16, 2021, 1:40 AM IST

Updated : Sep 16, 2021, 7:05 AM IST

சென்னை: திமுக முப்பெரும் விழா, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்றுக் காரணமாக திமுகவின் முப்பெரும் விழா, காணொலி காட்சி மூலமாக மாவட்ட வாரியாக நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் காணொலி மூலம் விழாவில் பங்கேற்றனர்.

முப்பெரும் விழாவையொட்டி, பெரியார் விருது மிசா மதிவாணன், அண்ணா விருது தேனி எல். மூக்கையா, கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது- வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- முபாரக் ஆகியோருக்கு வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது, " 72 ஆண்டு காலமாக தொடர்ந்து நாட்டிற்கு பாடுபட்டு வரும் திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கரோனா காலம் என்பதால் காணொலி காட்சி மூலமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100விழுக்காடு வெற்றி- மு.க. ஸ்டாலின்

கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில் 8 மாதங்கள் பொறுத்திருங்கள் நாம் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்னேன். அதேபோல் ஆட்சி மாற்றம் நடந்து, திமுக 6ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இது தொண்டர்களின் உழைப்பால் மட்டுமே இந்த வெற்றி கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெற வேண்டும்.

பெரியார் என்றால் சமூகநீதி, அண்ணா என்றால் மாநில உரிமை, கருணாநிதி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை, பாவேந்தர் என்றால் மொழிப்பற்று, பேராசிரியர் என்றால் இனமானம். இதுதான் இந்த இயக்கத்தின் கொள்கை இதனை கடைப்பிடித்துதான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக நான் சட்டசபையில் அறிவித்தது எனக்கு மிகப்பெரிய உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறிய அவர், " கரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் வழங்கியுள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

கருணாநிதி பெயரில் சர்வதேச நூலகம், அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய், அரசு பணியில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு ஆகியவற்றை 100 நாட்களில் செய்துள்ளோம்.

நாட்டிற்கு நல்லவர்கள், வல்லவர்கள் கொடுத்த பெயரை வாங்கியுள்ளோம் என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், அமைச்சர்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாதத்திற்கு இரண்டு முறை ஆய்வு செய்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் என்னுடைய கடமையாகும். திமுகதான் இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும். இதற்கான சபதத்தை தொண்டர்கள் எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: மகன் கொலைக்கு பழிதீர்த்த தாய்

Last Updated : Sep 16, 2021, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.