ETV Bharat / state

திமுக எம்பிக்கள் மக்களின் குரலாக ஒலிப்பார்கள் - ஸ்டாலின் - EIA

சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Sep 4, 2020, 5:49 PM IST

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ’சூழலியலைத் தகர்க்கும் சட்டம்’ என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை - 2020 குறித்த கருத்தரங்கம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம், சூழலியல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

மேலுன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக செய்தித் தொடர்பாளர்களும் இந்தக் காணொலி நிகழ்வில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, "இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கம், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்படும் சட்டம், சூழலைக் கெடுப்பதாக அமைந்திருப்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓர் அரசு ஏதாவது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தால், அது மக்களுக்கு ஓரளவு பயனுள்ள சட்டமாக அமையும். அத்தகைய நோக்கத்துடன் தான் சட்டம் கொண்டு வருவார்கள். ஆனால், பாஜக அரசு அமைந்த பிறகு கொண்டு வரப்படும் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்களாகத்தான் இருக்கின்றன. ஒரே நாடு என்ற அடிப்படையில் கொண்டுவரப்படும் அனைத்துச் சட்டங்களும், மாநில அரசுகளை இல்லாமல் ஆக்கும் சட்டங்களாகவே இருக்கின்றன.

கருத்தரங்கில் கலந்து கொண்ட திமுக எம்பிக்கள்

இப்போது சூழலியல் சட்டம் கொண்டு வந்து சூழலை மொத்தமாகக் காலி செய்யப் போகிறார்கள். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை என்று சொல்லப்படுகிற சுற்றுச்சூழல் வரைவு சட்டமானது எல்லா வகையிலும் மக்களுக்கு எதிரானதாக, இந்தச் சூழலைக் கெடுப்பதாக அமைந்துள்ளது.

இன்றைக்கு நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகின்றன. புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. திட்டங்கள், தொழிற்சாலைகள் மூலமாகக் கிடைக்கும் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம், வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய அனைத்தும் ஏற்க வேண்டியவை தான். ஆனால், அப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகள், திட்டங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக இருக்கக் கூடாது.

கருத்தரங்கு
கருத்தரங்கு
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்" எனத் தெரிவித்தார். இதற்கு முன்னதாக பேசிய இந்து ராம், திமுக, மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.