ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் - திருச்சி சிவா வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய எம்பி திருச்சி சிவா

author img

By

Published : Feb 9, 2021, 1:13 PM IST

மாநிலங்களவையில் இன்று (பிப். 9) பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, “தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொழிகளில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் ஏழாம் வகுப்புக்கு உயர்த்தப்படுகிறார்கள். சமஸ்கிருதம், இந்தி மொழிகள் கட்டாயம் எனும்போது தமிழ்நாட்டில் ஏன் தமிழை கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது.

மாநிலங்களவையில் பேசிய எம்பி திருச்சி சிவா

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும். இதேபோன்று மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களும் இதே கோரிக்கையை முன்னிறுத்தினர். இதுகுறித்து கல்வித்துறை அமைச்சகம் கவனிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...பட்ஜெட் கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் இன்று...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.