சென்னை: நாடாளுமன்றத்தின் 37ஆவது அலுவல் மொழிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 7) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது அமித் ஷா, "ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த முடிவு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.
ஆங்கில மொழிக்கு மாற்றார இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கலாம் என்று கூறினார். இவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
-
இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.https://t.co/JoFxgWDFNA
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.https://t.co/JoFxgWDFNA
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 8, 2022இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.https://t.co/JoFxgWDFNA
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 8, 2022
இதுகுறித்து அவரது ட்வீட்டில், "இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது. அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும், அமைச்சர்களும், இந்தி எதிர்ப்பின் வரலாற்றையும் தியாகத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் - அமித் ஷா சர்ச்சை கருத்து!