ETV Bharat / state

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மோசடி வழக்கு: விசாரணைக்கு மகன் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி காவல் துறையினர் முன், ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Sep 10, 2020, 7:28 PM IST

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 10) நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் யாருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

அதற்கு ஜெகத்ரட்சகன் சார்பில் பதிலளித்த வழக்கறிஞர் மணிசங்கர், ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும்,ஜெகத்ரட்சகன் நேற்றைய தினம் (செப்.9) சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும் அவரைத் தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் காரணமாகவே விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராவது குறித்து ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டதுடன், அந்த சம்மனில் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி, வழக்குத் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, காவல் துறையின் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

மேலும், ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர், அக்டோபர் 5ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.