ETV Bharat / state

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் - ரயில்வே துறைக்கு தயாநிதி மாறன் கோரிக்கை! - Chennai egmore railway station

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரா? விவரம் உள்ளே!

author img

By

Published : Feb 22, 2023, 9:12 PM IST

சென்னை: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், கனிமொழி ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் செய்தியாளரிடம்‌ பேசுகையில், மத்திய சென்னையும், வடசென்னை இணைக்கும் யானை கவுனி மேம்பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிகள் முடக்கப்பட்டு இருந்தது. வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் உறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதி ரயில்கள் போக்குவரத்து நெரிசல் குறைக்க மாலை நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் என்பதை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டதாக தெரிவித்த அவர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரூ.98 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் அனந்த் பேசுவையில், எழும்பூர், காட்பாடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதை விரிவாக பணிகள்‌ முடிக்க வேண்டும் என்ற‌ கோரிக்கைகளை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கோயில்களில் இலவச திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.