கூட்டுறவு துறை மீதான மானியக் கோரிக்கையின் போது சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெறுவதில் 40 கிராம் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வேளான் எந்திரங்கள் வாடகைக்கு விடுவதை அதிகரிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகளின் வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கொடுத்து உழவர் சந்தைகள் மூலம் சந்தைப்படுத்த வேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்ட நூலகத்திற்கு எஸ்.ஆர் ரங்கநாதன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எனவே கூட்டுறவு சங்கத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க :'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்