ETV Bharat / state

திமுக பொதுக்குழு கூட்டம் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! - stalin

திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடிக்கும், திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள எம்.பி ராசாவிற்கும் துணை பொதுச்செயலாளர் பதவி வழக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

dmk_meeting_curtain_raiser
dmk_meeting_curtain_raiser
author img

By

Published : Sep 9, 2020, 5:26 AM IST

சென்னை: திமுக தலைமையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதிவியேற்புடன் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா காலம் மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்குவதால், அரசியல் நிகழ்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. பொதுக்குழு எப்போதும் விமர்சியாக அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கம் அல்லது ஏதேனும் மைதானத்தில் நடைபெறும். இம்முறை கரோனா பாதிப்பால் முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கட்சி பொதுக்குழு ஆன்லைனில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் நடைபெறுவதால் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு இல்லை என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 3,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்பாளர்கள். அந்தந்த மாவட்டங்களில் மண்டபம் அல்லது கட்சி தலைமை அலுவலகத்தில் 100 பேருக்கு குறைவாக கூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் மேற்கு மாவட்டம் அண்ணா அறிவாலயத்திலும், சென்னை வடக்கு அறிவகத்திலும், சென்னை கிழக்கு லட்சுமி மஹாலிலும், சென்னை தெற்கு ஸ்ரீ சாய் கிருஷ்ணா ஹாலிலும் கூடவுள்ளனர். இதற்கான மாதிரி ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர். இந்த திமுக பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் வியூகம், களப் பணிகள், மக்களின் மனநிலை, உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பலவற்றை குறித்து ஆராயப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் பொறுப்பேற்க உள்ளனர். அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பலம் என்னவென்று பொதுக்குழுவிற்கு பிறகு தெரியும் என்று தெரிவித்திருந்தார். எனவே பொதுக்குழுவை தொடர்ந்து தேர்தல் பணிகளுக்கு திமுக ஆயத்தம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடிக்கும், திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள எம்.பி ராசாவிற்கும் துணை பொதுச்செயலாளர் பதவி வழக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.