ETV Bharat / state

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா திமுகவின் கோரிக்கைகள்? - திமுக

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மும்மொழிக் கொள்கை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளை விவாதிக்க நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

DMK
author img

By

Published : Jun 17, 2019, 11:11 AM IST

மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (ஜூன் 17) முதல் ஜூலை 26 வரை நடக்கவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

திமுகவின் கோரிக்கைகள் பின்வருமாறு:

  • நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
  • காவிரி மேலாண்மை வாரியம் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.
  • ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.
  • மேகதாது அணையை கட்டும் கர்நாடக அரசை தடுத்து நிறுத்திவிட வேண்டும்.
  • தமிழை ஆட்சி மொழியாக்கிட ஆவன செய்யவேண்டும்.
  • முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற சமரச முயற்சியை அம்மதத் தலைவர்களுடன் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டின் குடிநீர் பஞ்சத்தை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  • விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும்.
  • தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனை ரத்து செய்திட வேண்டும்.
  • தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்திட வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.