மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் பெரியார் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து (96) மாரடைப்பால் நேற்று (ஏப்ரல் 6) காலமானார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைந்த வே. ஆனைமுத்து உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தாம்பரம் எம்எல்ஏ ராஜா, திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மறைந்த வே. ஆனைமுத்துவின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 7) தானம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கணவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா!