ETV Bharat / state

திராவிடப் பள்ளியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்! - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

சென்னை : திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அஞ்சல், இணைய வழிக் கல்வி முறைகளிலான திராவிடப் பள்ளியை திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

DMK leader stalin opens news dravida school

author img

By

Published : Sep 17, 2020, 3:05 PM IST

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அஞ்சல், இணைய வழிக் கல்வி முறைகளிலான திராவிடப் பள்ளியை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், "பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் சீரிய முயற்சியால் இன்று (செப்.17) திராவிடப் பள்ளி தொடங்கி வைக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்த நாள், திமுகவின் பிறந்தநாளும் கூட. நேற்று முன்தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். இந்த மூன்று விழாக்களை முப்பெரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பேராசிரியர் சுப.வீ இந்தத் திராவிடப் பள்ளியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

சுப.வீரபாண்டியன் இன்றைக்கு நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு, திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்தத் திராவிடப் பள்ளியை உருவாக்கி இருக்கிறார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் ஒரு அருமையான நிலையில் இந்தத் திராவிடப் பள்ளியை, மக்களிடம், குறிப்பாக, இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியை அவர் தொடங்கி இருக்கிறார்.

திராவிடத் தத்துவத்தின் கொள்கைகள் நிலைப்பெற்றிட, வெற்றி பெற்றிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.