ETV Bharat / state

திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணியின் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : Jun 14, 2019, 1:09 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தவர் ராதாமணி. இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ராதாமணியின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிகுப்பத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் ராதாமணியின் இறப்புக்கு திமுக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 'விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைந்தார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராதாமணி கண்டமங்களம் ஒன்றிய கழகச் செயலாளராக ஆறு முறையும், விழுப்புர மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர்.

திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றும் அவர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்பவர். தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டப்பேரவையில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், கருணாநிதியின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர்.

அவரது மறைவு கழகத்தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும். தொகுதி மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த கழக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

*விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ இராதாமணி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்*

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான திரு ராதாமணி  அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக  திடீரென்று மறைந்தார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு ராதாமணி கண்டமங்களம் ஒன்றிய கழகச் செயலாளராக ஆறு முறையும், விழுப்புர மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றும் அவர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்பவர். தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர். அவரது மறைவு கழகத்தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

தொகுதி மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.