ETV Bharat / state

சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Sep 18, 2019, 1:10 PM IST

சென்னை பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் 'இனி பேனர் வைக்கமாட்டோம்' என பிரமாண பத்திரத்தை கொடுத்து சுபஸ்ரீயின் பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்து, திமுக அறக்கட்டளை சார்பாக சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், "கடந்த வாரம் ஆளும்கட்சியின் பேனர் விழுந்து சுபஸ்ரீ அகால மரணம் அடைந்திருக்கிறார். 2017ஆம் ஆண்டே பேனர் வைக்கக் கூடாது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற்றபின்தான் வைக்க வேண்டும் என வலியுறுத்திவந்தேன். ஏற்கனவே கோவையில் ரகுவை பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீயை பலிகொண்டது வருத்தமளிக்கிறது.

ஒரு சில பேனர்களுக்கு அனுமதி பெற்றுவிட்டு நூற்றுக்கணக்கில் அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர். சாலையை ஆக்கிரமித்து வழிநெடுகிலும் வைத்து நீதிமன்ற உத்தரவை மீறுகின்றனர்.

சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுகவினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கும். இனி பேனர் கலாசாரம் இருக்கக் கூடாது. அதிமுக அரசு நினைத்தால் பேனர் வைத்தவரை உடனடியாக கைது செய்யலாம், இதை நான் அரசியலாக்கவில்லை" என்று கூறினார்.

Intro:சென்னை குரோம்பேட்டையில் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பேனர் வைக்கமாட்டோம் பிராமண பத்திரத்தை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் 5 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினார்.
Body:சென்னை குரோம்பேட்டையில் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பேனர் வைக்கமாட்டோம் பிராமண பத்திரத்தை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் 5 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கடந்த வாரம் ஆளும்கட்சியின் பேனர் விழுந்து சுபஸ்ரீ அகால மரணம் அடைந்திருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டே பேனர் வைக்க கூடாது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடம் அனுமதி பெற்று தான் வைக்கவேண்டும் என வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

ஒரு சில பேனர்களுக்கு அனுமதி பெற்று 100 கணக்கில் பேனர் வைக்கின்றனர் அதிமுக அமைச்சர்கள். சாலையை ஆக்கிரமித்து வழிநெடுகிலும் வைத்து நீதிமன்ற உத்தரவை மீறுகின்றனர்.

ஏற்கனவே கோவயில் ரகுவை பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீயை பலிகொண்டது வருத்தமளிக்கிறது.

அவர்கள் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். என்னதான் ஆறுதல் கூறினாலும் அவர்கள் மனம் ஆறாது.

சுபஸ்ரீயின் தந்தை கூறுகையில் இதன்பிறகு இது போன்ற மரணம் ஏற்படகூடாது. முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திமுகபினர் யார் பேனர் வைத்தாலும் திமுக நடவடிக்கை எடுக்கும் .பேனர் கலாச்சாரம் இருக்ககூடாது.

என்னதான் உதவிதொகை வழங்கினாலும் ஈடாகாது.

நினைத்தால் பேனர் வைத்தவர் உடனடியாக கைது செய்யலாம், இதை நான் அரசியலாக்கவில்லைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.