அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக். 2) கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள் நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் நினைவுக் கூர்ந்துள்ளார். அதில். “அடிமை இந்தியாவில் சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத் தந்தை!
அவர் காண விரும்பிய சமத்துவ சமூகம் - சமூக நல்லிணக்க சமுதாயம் - அனைவருக்குமான நாடு ஆகியவற்றை அமைக்கப் போராடுவோம்!
கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார். கிராமம் காக்க, வேளாண்மை செழிக்க, விவசாயி வாழ நம்மை நாமே அர்ப்பணிப்போம்! வாழ்க எம்மான்!” என்றுள்ளார்.
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து முக ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவும், தமிழகம் உரிமையோடு திகழவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிப்பெரும் தலைவர் அவர். ஏழைகள் ஏற்றம் பெறவும் - எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவும் - உலகில் தமிழன் உயர்ந்து நிற்கவும் - பெருந்தலைவர் விரும்பினார். அவர் விருப்பத்தை நம் கடமையாகக் கொண்டு உழைப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...பூரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளின் மணற்சிற்பம்....!