ETV Bharat / state

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு  - உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் தான் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dmk Kanimozhi election case dismissed by Chennai HC
author img

By

Published : Nov 19, 2019, 3:32 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, தன்னுடைய வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மக்கள் ஒரு வேட்பாளரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, வேட்பு மனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவர் வருமானத்தை அவர் மறைத்தது தவறு என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மனுதாரர் தொடர்ந்த வழக்கு மட்டுமே விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்த நீதிபதி, தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'ஃபாத்திமா தற்கொலையில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது' - மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி

Intro:Body:தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் தான் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,
அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில்,தன் கணவர் வருமானத்தை மறைந்தது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,
வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனது உத்தரவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மனுதாரர் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்த நீதிபதி,
தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.