சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு நேற்று (ஆகஸ்ட் 7) திமுக தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனக்கு இன்று முக்கியமான நாள். திமுக-வின் தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் பெற்றும், நன்றியையும் தெரிவித்தேன்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து நானும் செயலாற்றுவேன், இந்த அணியை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். கட்சியில் பதவி முக்கியமில்லை, பொறுப்புதான் முக்கியம். அதை கட்சி தலைமை பார்த்து வழங்கும்" என தெரிவித்தார்.