ETV Bharat / state

வாக்குக்காக திமுக இரட்டை வேடம் போடுகிறது - எல்.முருகன் - திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது

சென்னை: திருத்தணியில் ஸ்டாலின் வேலை பரிசாக வாங்கிக் கொண்டு மற்றொரு நிகழ்வில் கனிமொழி வேலை வாங்க மறுத்து உள்ளார், இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

எல்.முருகன் குற்றச்சாட்டு
எல்.முருகன் குற்றச்சாட்டு
author img

By

Published : Feb 11, 2021, 11:50 AM IST

சென்னை கோயம்பேட்டில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது‌. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி, தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில், "அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் மூத்த தலைவர்கள் அமர்ந்து பேசி அதனை முடிவு செய்வோம்.

வெற்றி வேல் யாத்திரை நடத்த கூடாது என்று யாரெல்லாம் புகார் அளித்தார்களோ அவர்களே இன்று வேலை தூக்கியுள்ளனர். இதுதான் வேல் யாத்திரையின் வெற்றி. திருத்தணியில் ஸ்டாலின் வேலை பரிசாக வாங்கிக் கொண்டு மற்றொரு நிகழ்வில் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி வேலை வாங்க மறுத்து உள்ளார், இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இது வாக்குக்காக மட்டும்தான்" என்று விமர்சனம் செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.