ETV Bharat / state

'திமுக தான் எங்களுக்கு எதிரி; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதிரி’ - நச் பஞ்ச் அடித்த செல்லூர் ராஜூ

author img

By

Published : Nov 25, 2019, 1:34 PM IST

சென்னை: திமுகதான் அதிமுகவுக்கு நிரந்தர எதிரி எனவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் உதிரி எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

DMK is our enemy, Auditor Kurumoorthy is a spare, minister Sellur Raju punch

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அவருக்கும் அதிமுகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

குறிப்பாக, அதிமுக குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளை நாங்கள் மதிப்பதும் இல்லை; பதிலளிப்பதும் இல்லை. எங்களுக்கு திமுகதான் நிரந்தர எதிரி. மற்றவர்கள் அனைவரும் உதிரி. அந்த உதிரிகளில் ஒருவர்தான் குருமூர்த்தி. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து நாங்கள் மரியாதையாகப் பேசுகிறோம். ஆனால், அவரோ முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் ஒருமையில் பேசிவருகிறார்” என்றார்.

இதையும் படிங்க: ’பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும்’ - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:Body:அதிமுகவுக்கும், ஆடிட்டர் குரு மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, வெங்காய விலை ஏற்ற விவகாரத்தில் தூங்குபவர்களை எழுப்பலாம் என்றும் தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்வது? என்ன செய்வது கேள்வி எழுப்பினார். அரசின் பசுமை பண்ணை கடைகளில் கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மகாராஷ்டிராவில் மழை காலமாக இருப்பதால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வெங்காய விலை ஏறியுள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ வெங்காய பதுக்கல் தமிழகத்தில் கிடையாது எனவும் அப்படி பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தற்போது கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஜனவரி மாதத்தில் கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் கூறினார்.

விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியதாகவும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குறித்து நாங்கள் மரியாதையாக பேசுகிறோம் ஆனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசிவருவதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுகவை யாரும் வழிநடத்தவில்லை எனவும் ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் அதிமுகவை வழி நடத்துகிறார்கள் என்றார். அதிமுகவிற்கும், குரு மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக 3வது முறையாக ஆட்சியமைக்கும் அதிசயம் 2021ம் ஆண்டில் தமிழகத்தில் நடக்கும் என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.