ETV Bharat / state

கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ் - DMK government conspiracy to include me in Kodanadu murder case

கொடநாடு கொலை வழக்கில் தன்னையும் சேர்க்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சதி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இபிஎஸ்
இபிஎஸ்
author img

By

Published : Aug 18, 2021, 12:15 PM IST

Updated : Aug 18, 2021, 12:25 PM IST

திருத்தப்பட்ட நிதி மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று (ஆகஸ்ட் 18) மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியதும் கொடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடுவதாக திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, திமுகவிற்கு எதிராகக் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து, பாஜக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வெளிநடப்புச் செய்தனர்.

ஜெ. மறைவும் கொடநாடு பங்களாவும்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "திமுக அரசு மக்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை தனது அதிகார பலத்தால் நசுக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் அதிமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர்.

அதிமுகவை நசுக்கும் தவறான கண்ணோட்டத்தோடு செயல்பட்டுவருகிறார்கள். அவர்கள் தொடுகின்ற அத்தனை வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இன்றும் நாளையும் நடைபெற உள்ள கூட்ட நிகழ்வுகளை புறக்கணிப்போம்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு வீட்டில் சயன், அவரது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அதனையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மறு விசாரணை கோராத சயன்

அந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் சயன் என்பவரை அழைத்து திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ரகசிய வாக்குமூலம் பெற்றதாகச் செய்தி செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளன.

கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முன்னிலையாகியுள்ளார். ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது திமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னிலையாகி வாதாடியுள்ளனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கிறார்கள். CRPC 313இன் பெயரில் சாட்சிகள் விசாரணையின்போது சயன் மறு விசாரணை கோரவில்லை. வழக்கு நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடையும் நிலையில் மறு விசாரணை கோர நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

மக்களுக்கு மட்டுமே தலை வணங்குவோம்

கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சதி செய்கிறது. என் மீதும் அதிமுகவினர் மீதும் வீண் பழிபோடும் வகையில் ஜோடித்த வழக்கைப் பதிவு செய்கிறார்கள். எத்தகைய சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்களைக் காக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும்.

இன்றைக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிமுக தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்த நினைப்பது ஒருபோதும் நடக்காது. 2021 தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற முடியாத நிலையில் மக்களைத் திசை திருப்ப பொய் வழக்குப் போடும் முயற்சியை திமுக கையிலெடுத்துள்ளது.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அச்சுறுத்தல்களிலிருந்து ஒருபோதும் வெல்ல முடியாது. மக்களுக்கு மட்டுமே தலைவணங்குவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு - ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Last Updated : Aug 18, 2021, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.