ETV Bharat / state

‘இனி திருநங்கைகளும் திமுக உறுப்பினர் ஆகலாம்’ - பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: திருநங்கைகளை கட்சியில் உறுப்பினராகச் சேர்க்க திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 10, 2019, 8:51 PM IST

dmk general body meeting

திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.யே மைதனாத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூழுக் கூட்டத்தில் திமுக விதிகளில் சில சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும், 21 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீக்கும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில், திருநங்கைகளை கட்சியில் உறுப்பினர்களாக இணையத்தின் வழியாக சேர்க்கத் தீர்மானம் இயற்றப்பட்டது. திமுக இளைஞர் அணியில் இருக்க வயது வரம்பு 18 முதல் 35ஆக மாற்றி திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும், பிற மாநிலங்களில் உறுப்பினர்களைச் சேர்த்து தமிழ்நாட்டைப்போல் அங்கும் செயற்குழு, அமைத்துக்கொள்ளலாம் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘அகில இந்திய பிரச்னையில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் மட்டும் போராடுவது வேதனை’ - டி.கே. ரங்கராஜன்

Intro:Body:திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்க ஏதுவாக விதிகளை மாற்றி திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சியே மைதானத்தில் நடைப்பெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் 21 முக்கிய தீர்மானங்களும், திமுக விதிகளில் சட்ட திருத்தங்கள் செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு முன்பு பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள்: திருநங்கைகளை உறுப்பினர்களாகச் சேர்க்கவும், பொது உறுப்பினர்களை இனி இணையதளம் மூலமாகவும் சேர்த்திடவும் விதிகளில் திருத்தம் செய்ய திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அனைத்து நிர்வாகிகள் தலைமைக் கழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவை மாற்றக் கூடிய அதிகாரம், கட்சியில் ஒருவரை உறுப்பினராக சேர்க்க, நீக்கும் அதிகாரம் என பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் திமுக தலைவருக்கும் வழங்கப்பட்டது.

இளைஞர் அணியில் இருக்க வயது வரம்பு 18 முதல் 35 ஆக மாற்றி திருத்தம் செய்யப்பட்டது. அதோடு இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவில் வேறு பொறுப்புகள் வகிக்க முடியாது

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயேகிளை அமைப்பு செய்து கொள்ளலாம்.

அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்

திமுக ஊராட்சி அமைப்புகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக, 99 ஆயிரத்து 401 கிளைகளாக பிரிப்பது என சட்டதிட்ட திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.