புதுடெல்லி: திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இலங்கையில், இலங்கைத் தமிழர்கள், இந்திய தமிழர்கள் என இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் இந்தியா திரும்பி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சரத்துகள் இல்லாத ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சமானது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வந்த இந்து, புத்த, ஜெயின், சீக்கிய, பார்சி, கிறிஸ்துவ மதங்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை என்பது பாரபட்சமானதாகும் . மதரீதியில் குடியுரிமை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கு எதிரானது.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் பாரபட்சமாக நடந்து கொள்ளும் மத்தியஅரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை