சென்னை: தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.1) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் கதறி அழுததை பார்த்த சக போலீசார் இளைஞர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (23) என்பதும், இருவரும் கட்சி நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
![திமுக நிர்வாகிகள் மீது பெண் காவலர் பாலியல் புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-attemptingtomisbehavewithafemalepoliceman-photo-script-7208368_01012023224305_0101f_1672593185_586.jpg)
அவர்களை கைது செய்ய முயன்ற போது கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'புத்தாண்டு பாதுகாப்பு' காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு