திமுக பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் இன்று நடைபெறவிருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக பொதுக்குழு முதல் முறையாக ஆன்லைனில் நடப்பதால் அது குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு திமுகப் பொருளாளராக உள்ள துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இவர்கள் இருவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முறைக்கு திமுகவே அடித்தளமிட்டது!