ETV Bharat / state

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - விவாதிக்கப்படுவது என்ன? - dmk didtrict secretary meeting

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், பிரஷாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  dmk didtrict secretary meeting  ஆர் எஸ் பாரதி
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
author img

By

Published : Feb 17, 2020, 7:05 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக பொருளாளர் துரைமுருகன், துணை. பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ. பெரியசாமி, வி.பி. துரைசாமி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சேலம், திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவியில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், திமுக கட்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'டிஎன்பிஎஸ்சி விவகாரம்... அரசு தலையிட முடியாது' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Intro:

Body:Visual

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.