ETV Bharat / state

‘பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமையை மத்திய அரசு தடுக்கிறது’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு - stalin condemns centre

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை மத்திய அரசு திட்டமிட்டு பறிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : May 28, 2020, 12:16 AM IST

இது தொடர்பாக அவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்!

பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில் - பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.

அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.