தென்னிந்திய இசை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவருமான ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (டிச.28) காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ரஹ்மானின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு, ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் கரீமா என்றும், தாயின் இழப்பால் துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தன் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.