இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "சொந்த வாகனத்தில் பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும், சரக்குப் போக்குவரத்தை நம்பியிருக்கும் வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.
சுங்கச் சாவடிகளை பயன்படுத்தும் காலம் அதிகரிக்கும்போது கட்டணத்தைக் குறைப்பதும் ரத்து செய்வதுமே நியாயமாகும். மாறாக, அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளையாகும்.
உடனடியாக இந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக்கூடாது" எனப் பதிவிட்டுள்ளார்.