ETV Bharat / state

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் - assembly elections

மாநிலங்களவை தேர்தல் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

author img

By

Published : May 26, 2022, 2:14 PM IST

சென்னை: தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்கி 31ஆம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

இதையும் படிங்க: செயற்கை புல் கால்பந்து மைதானம்: அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.