மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கொ.ம.தே.க, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற விவரங்களை நேற்று முன்தினம் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில், 20 தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்களை இன்று அவர் அறிவிக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாகிறது.