ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி சூரியநாராயண தெருவில் உள்ள தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது,அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் மக்கள் ஓட ஓட விரட்டப் போகிறார்கள். ராயபுரத்தில் உள்ள அதிமுக தொண்டர்களை நட்டாற்றில் விட்டு மே 3-ஆம தேதி பாஜகவில் இணையபோகிறார்.
25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த ஜெயக்குமார், குடிநீர் வசதி செய்து தரவில்லை, கழிவு நீர் வாய்க்காலை மேம்படுத்தவில்லை, ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப் பாதையில் காமராஜர் கல்வெட்டை தூக்கி விட்டு தனது பெயர் கொண்ட கல்வெட்டாக மாற்றிக் கொண்டார்.
மீன்பிடி மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க மாட்டேன் என மக்களை மிரட்ட தொடங்கியுள்ளார். ஜெயக்குமாருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
ராயபுரத்தில் வசிக்கும் கடலோர மீனவப் பெண்களுக்கு கழிவறை வசதி இல்லை. 85 கிராமங்களை அழிக்கும் அதானியின் துறைமுகத்தை எதிர்க்க ஜெயக்குமாருக்கு துணிவு இருக்கிறதா?
மோடிக்கு அடிமையாக இருந்த அமைச்சர், ராயபுரத்தில் ஒரு கேந்திரிய வித்யாலயா கட்டி கொடுத்திருக்கலாமே, டிஎன்பிஎஸ்சி அமைச்சராக இருந்தவர் ஒரு பயிற்சி மையம் கூட இந்த தொகுதியில் அமைத்து தரவில்லையே என ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.