ETV Bharat / state

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது - dmk meeting held in Anna Arivalayam

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
author img

By

Published : Dec 28, 2022, 6:43 AM IST

Updated : Dec 28, 2022, 12:05 PM IST

சென்னை: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

திமுகவில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என மொத்தம் 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் சமீபத்தில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடந்து முடிந்ததுள்ள நிலையில், தேர்தலில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக"

Last Updated : Dec 28, 2022, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.