ETV Bharat / state

நாதக கூட்டத்தில் திமுகவினர் கொலைவெறித் தாக்குதல்; ஜனநாயகப் படுகொலை - இபிஎஸ் கண்டனம் - dmk Attack at naam tamil party meeting in dharmapuri

இனியாவது விடியா அரசின் முதலமைச்சர், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றில்லாமல், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துகள் வெளிப்படுத்துவதையும் காவல் துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாதக கூட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

author img

By

Published : Dec 24, 2021, 6:17 AM IST

Updated : Dec 24, 2021, 6:44 AM IST

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டுவருகிறது என்பதற்குப் பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக்காட்டிவருகிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு (டிசம்பர் 21) தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஜனநாயகப் படுகொலை

ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல் துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கைப் பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நரகல் நடையில், நாராச நடையில் ஜெயலலிதாவின் அரசையும், எங்களையும் விமர்சித்தவர்கள் திமுகவினர்.

காவல் துறை, ஏவல் துறை

எப்போதும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் குத்தகைதாரர்கள் தாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்த ஸ்டாலின் இன்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி, எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் குரல் வளையை நெரிக்கிறார்கள்.

நாதக கூட்டத்தில் கொலைவெறி தாக்குதல்
நாதக கூட்டத்தில் கொலைவெறி தாக்குதல்

தனக்குக் கீழுள்ள காவல் துறையை, திமுகவினரின் ஏவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது, ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போதுள்ள விடியா அரசில், தமிழ்நாட்டில் உள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானோர் மீது வழக்குப்பதிவு - விந்தை

தருமபுரி சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவறிய அங்கிருந்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு காவல் துறைத் தலைவரை வற்புறுத்துகிறேன்.

டிசம்பர் 21 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோதவாடி குளம் நிரம்பி வழிந்ததை அடுத்து, அக்கிராம மகளிர், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனை கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.

அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பல அரசு, கட்சிப் பதவிகளை வகித்த, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீதும், வழிபட்ட மகளிர் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

இதை அன்றே நான் கண்டித்தேன். இருப்பினும், தாக்குதலுக்குள்ளான சட்டப்பேரவை உறுப்பினர், பொதுமக்கள் மீதே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது விந்தையாக உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

பொதுமக்களே வீதியில் இறங்கிப் போராடும் நிலை உருவாகும்

பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையிலேயே, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினரை விட்டுவிட்டு, தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் வகித்த தமிழ்நாடு காவல் துறை, இந்த விடியா அரசில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்பட்டுவருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இனியாவது விடியா அரசின் முதலமைச்சர், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றில்லாமல், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவை ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துகள் வெளிப்படுத்துவதையும் காவல் துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

இல்லையெனில் இந்த அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கிப் போராடும் நிலை உருவாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாத்த படக்குழுவுக்குத் தங்கச்சங்கிலி அணிவித்த ரஜினி!

Last Updated : Dec 24, 2021, 6:44 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.