ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக மீது வழக்கு போடுவோம் - ஆ.ராசா

சென்னை: அதிமுக அரசு ஊழல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உயர்நீதிமன்றம் செல்வோம், அங்கும் நடவடிக்கை இல்லை என்றால் எங்கள் ஆட்சி வரும்போது வழக்கு போடுவோம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்தார்

dmk mp rasa
dmk mp rasa
author img

By

Published : Dec 23, 2020, 5:52 PM IST

சென்னை காசிமேட்டில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் திமுக சார்பில் மீனவர் சமுதாய மக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, "திமுகவினர் மீது போடப்பட்ட எந்தவொரு ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை, யாருக்கும் தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா மீது அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத ஊழல்வாதி என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக மீது வழக்கு போடுவோம்

இதற்கு அதிமுகவினரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை. அதிமுக அரசு மீது இன்னும் எத்தனை ஊழல்கள் எங்களுக்குத் தெரிய வருகிறதோ அத்தனை ஊழல்களையும் வெளிப்படுத்துவோம்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த எங்கள் ஆட்சி மாறும்போது வழக்குப் போடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய்யின் 'மாஸ்டர்' கதை இதுதான்? கசிந்த தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.