ETV Bharat / state

TN Assembly: தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. ஆளுநருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு! - CM Stalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

TN Assembly: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!

author img

By

Published : Jan 9, 2023, 10:56 AM IST

Updated : Jan 9, 2023, 12:18 PM IST

சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி 9.50 மணிக்கு சட்டப்பேரவை வந்தடைந்தார். அவருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர், சட்டப்பேரவை மாடத்தில் கூட்டம் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பு வணக்கம் என்று தமிழில் தனது அறிமுக உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி, ஆளுநர் பேச ஆரம்பித்த உடன் தமிழ்நாடு vs தமிழகம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான தமிழர் வாழ்வுரிமை கட்சி, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

  • #WATCH | Chennai: A ruckus breaks out at the Tamil Nadu assembly soon after Governor RN Ravi begins his address as the Session begins.

    A few MLAs of DMK alliance parties are raising slogans against the Governor.

    (Video Source: Tamil Nadu Assembly) pic.twitter.com/M8gzGDwKO7

    — ANI (@ANI) January 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்தி திணிப்பு, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காததால் ஆளுநர் வெளியேற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியதோடு, விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக தலைமை விவகாரத்தில் சட்ட மோதலில் ஈடுபட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

Last Updated : Jan 9, 2023, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.