ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 12 மாதங்கள் பேறுகால விடுப்பு

திமுக அரசு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
author img

By

Published : Aug 14, 2021, 7:02 AM IST

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமிழ்நாடு பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட்டாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது. இந்த பட்ஜெட் புதுமையான திட்டங்களும் , முன்னேற்ற திட்டங்களும் எதுவும் இல்லாத வழக்கமான பட்ஜெட்டாக தான் இருக்கிறது . பட்ஜெட்டில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையைப் பற்றியும் தெளிவான விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை.

மக்கள் மீது புதிய வரிகள் சுமத்துவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது போல் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அம்மா உணவகத் திட்டத்தை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெற வில்லை.

மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியை விட்டு போகும் போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது என அதிமுக கூறியிருந்தது . தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் , அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கு போல் கடன் உள்ளது என கூறுவதில் இருந்து பட்ஜெட் வாசிப்பது என்பது சடங்காக தான் இருக்கிறதே தவிர சரித்திரமாக இன்னும் மாறவில்லை என்பது தெள்ள தெளியாகிறது.

இனி வரும் காலங்களிலாவது பட்ஜெட் என்பது சரித்திரமாக மாற வேண்டும். பட்ஜெட் வாசிப்பவர்கள் ஆண்ட கட்சியை குறை சொல்வதும், நிதிப்பற்றாக்குறை உள்ளதாகவும், கடனில் விட்டு சென்றதாகவும், கூறுவதில் இருந்தே வழக்கமான பட்ஜெட்டாகத் தான் இதனை பார்க்க முடிகிறது . தமிழ்நாட்டின் கடன் சுமைக்காக நாளொன்றுக்கு வட்டி மட்டுமே சுமார் 87 கோடி செலுத்தி வருவதாகவும், இந்த வட்டிச் சுமை இல்லையென்றால் வேலைவாய்ப்பு , உள்கட்டமைப்பு போன்ற பல புதிய திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர முடியும். இதுபோன்ற ஆக்கப்பூரியமான அறிவிப்புகளை தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

பெட்ரோல் விலை குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் மீதான வரியில், தற்போது 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது . இதனால் 100 ரூபாய்க்கு கீழ் பெட்ரோல் விலை குறைந்துள்ளதாகவும், இது சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதால் பெட்ரோல் விலை குறைப்பை தேமுதிக வரவேற்கிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அறிவித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இந்த பட்ஜெட் பெரிய அளவிலான வரவேற்பும் இல்லாமல், குறை சொல்ல முடியாமலும் நடுநிலையான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. எனவே, இது வழக்கமான சம்பிரதாய பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நேரத்து கவர்ச்சி வாக்குறுதிகள் என்ன ஆயின? : டிடிவி தினகரன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.