ETV Bharat / state

அண்ணாமலையின் 'என் மண்... என் மக்கள்' பாதயாத்திரை; தேமுதிகவிற்கு அழைப்பு! - bjp padhayatra

திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை செல்லவிருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 3:18 PM IST

சென்னை: திமுக அரசுக்கு எதிராகவும், பாஜகவின் வளர்ச்சிக்காகவும் நாளை மறுநாள்(ஜூலை28) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி 'என் மண்... என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கும் இந்த பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (ஜூலை26) பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதுகுறித்து நேற்று முன்தினம்(ஜூலை 24) மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பதிலளித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, ''தேமுதிகவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை'' எனக் கூறியிருந்தார்.

தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்தது குறித்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், ''2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது அழைப்பு விடுத்துள்ளோம்'' எனக் கூறினார்.

நாளை மறுநாள் பாதயாத்திரை தொடங்க இருக்கும் சூழலில் இதில் பங்கேற்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து இன்று மாலை அல்லது நாளைக்குள் அறிவிக்கப்படும் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் இந்த அழைப்பு கூட்டணிக்கான அழைப்பு என்று கூறப்படுகிறது.

இதில், தேமுதிக கலந்து கொள்ளும் பட்சத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படலாம் எனவும் பரவலாக பாஜக வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி: இதுவரை 22 பேர் கைது - பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.