சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிகவைச் சேர்ந்த கரூர் மாவட்ட பொருளாளர் கே.எஸ். அரிவின்ஸ் மற்றும் 200க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் திருச்சி கேசவன் இன்று திமுகவில் இணைந்தார்.
இந்நிகழ்வின் போது திமுக முதன்மைச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ, கரூர் வடக்கு நகரச் செயலாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரிவின்ஸ், 'கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று திமுகவில் இணைந்த நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து: இளம்பெண்ணின் இடதுகால் அகற்றம்!