சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையான வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.103.82 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.95.47 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.94.36 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 222 டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகையான ஒரே நாளில் சுமார் ரூ 8 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி உள்ளது.
நேற்று முன்தினம் (நவம்பர் 13) ரூ. 5 கோடி மட்டுமே விற்பனையான நிலையில், நேற்று ரூ. 8 கோடிக்கு மது விற்பனையானது. தீபாவளியை ஒட்டி தமிழ்நாட்டில் 2018, 2019ஆம் ஆண்டுகள் முறையே ரூ.325 கோடி, ரூ.455 கோடிக்கு மது விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் மது விற்பனை: அரசுக்கு ஐடியா கொடுக்கும் கார்த்தி சிதம்பரம்