ETV Bharat / state

தமிழ்நாட்டில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..? அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு..!

தமிழ்நாட்டில் மூன்று நாள்களில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று வெளியாகும் செய்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

author img

By

Published : Oct 25, 2022, 10:45 AM IST

Updated : Oct 25, 2022, 12:40 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மூன்று நாள்களில் ரூ.708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள என்னும். அந்த வகையில் அக். 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரூ. 205.42 கோடிக்கும், அக். 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, ரூ. 258.79 கோடிக்கும், தீபாவளி நாளான நேற்று ரூ. 244.08 கோடிக்கும் மது விற்பனையானது என்று செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் சில ஊடகங்கள் கொண்டு சேர்க்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக பாமாக நிறுவனர் இராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளில் ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது - பாமக நிறுவனர் இராமதாசு

Last Updated : Oct 25, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.