ETV Bharat / state

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு! - சென்னை

சென்னை: தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

diwali-crackers-burst-time-announce
author img

By

Published : Oct 24, 2019, 9:24 AM IST

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாகும். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளலாம்.
  • பொது மக்கள் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க:

'தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு; புக் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்'

Intro:தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு

Body:தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இந்தத் திருநாளில் விலங்குகளை வரிசையாக வைத்து இறைவனை வழிபடுவது மரபு. இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் எண்ணை வைத்து குளித்து விட்டு இறைவனை விளக்குகளாலும் ,மலர்களாலும் அலங்கரித்து வணங்குவதுடன் பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வார்கள்.
அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம் ,நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிரடியான ஒளி மற்றும் மாசினால் ,மக்கள் குறிப்பாக சிறு குழந்தைகள் ,வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது .இருந்தபோதிலும் தமிழ்நாட்டிலுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும் ,நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு இந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்துக் கொண்டது.

இந்த வழக்கில் 2018 அக்டோபர் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டுமெனவும் வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

உச்சநீதிமன்ற ஆணையில் பட்டாசுகளை வெடிப்பது காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாகும்.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளலாம்.

பொது மக்கள் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்க படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.