ETV Bharat / state

ஏழைகளுக்கு இலவச உணவு - 'மகிழ்மதி' இயக்கத்தைத் தொடங்கிய சத்யராஜ் மகள்! - மகில்மதி இயக்கத்தை ஆரம்பித்த ஊட்டச்சத்து நிபுணர். திவ்யா

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

author img

By

Published : Aug 2, 2020, 10:50 PM IST

பிரபல நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா மக்களிடம் நன்கு அறிமுகமான ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்.

ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தரமான உணவு வழங்கிடுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் இவ்வியக்கம் மேற்கொள்ளும். மகிழ்மதி இயக்கம் என் கனவு.

என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது மகிழ்மதி என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதன்படி இயக்கத்திற்கு மகிழ்மதி என்று பெயர் சூட்டியுள்ளேன்.

இந்தியாவில் ஒரே ஆண்டில் 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் 30 விழுக்காடு உணவுகள் வீணாகின்றன. உணவும், ஊட்டச்சத்தும் வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரையும் குழந்தைகளையும் கரோனா போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய உணவு தேவை. தற்போது ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" எனக் கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.