இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 93 ஆயிரத்து 146 பேர் வீட்டில் நேற்று வரை 28 நாட்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
அவர்களில், 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை 49,963 பேர் முடித்துள்ளனர். தற்போது 93 ஆயிரத்து 549 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 165 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனிமைப்படுத்த வார்டில் ஆயிரத்து 884 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கும் , சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கும், திருச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக புள்ளிவிவரம்:
மாவட்டம் | கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை |
---|---|
சென்னை | 182 |
கோயம்புத்தூர் | 97 |
ஈரோடு | 60 |
திருநெல்வேலி | 56 |
திண்டுக்கல் | 55 |
நாமக்கல் | 41 |
செங்கல்பட்டு | 41 |
தேனி | 40 |
திருச்சிராப்பள்ளி | 39 |
ராணிப்பேட்டை | 36 |
திருவள்ளூர் | 29 |
திருப்பூர் | 26 |
மதுரை | 25 |
தூத்துக்குடி | 24 |
நாகப்பட்டினம் | 24 |
கரூர் | 23 |
விழுப்புரம் | 23 |
திருப்பத்தூர் | 16 |
கன்னியாகுமரி | 15 |
கடலூர் | 15 |
சேலம் | 14 |
திருவாரூர் | 13 |
விருதுநகர் | 11 |
தஞ்சாவூர் | 11 |
வேலூர் | 11 |
திருவண்ணாமலை | 11 |
நீலகிரி | 9 |
காஞ்சிபுரம் | 6 |
சிவகங்கை | 6 |
தென்காசி | 3 |
கள்ளக்குறிச்சி | 3 |
ராமநாதபுரம் | 2 |
அரியலூர் | 1 |
பெரம்பலூர் | 1 |
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்மாவட்டங்கள் கூடுதல் கண்காணிப்பு மாவட்டங்களாக (ரெட் அலர்ட்) சுகாதாரத்துறைப் பட்டியிலிட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் பாதிப்புகள் மிதமாக உள்ளன. எட்டு மாவட்டங்களில் பாதிப்புகள் ஓரளவு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரெட் அலட்டில் உள்ள மாவட்ட மக்கள் பயப்பட தேவையில்லை. கவனத்துடன் அரசின் விதுமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே போதுமானதாகும். இப்போது நமக்கு தேவை பயமல்ல... கவனம்தான் முக்கியம்...
இதையும் படிங்க....தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று